சுற்றுலாப் பயணிகள் மாட்டு வண்டியில் பயணம்!

எரிபொருள் தட்டுப்பாட்டால் அம்பாறை-பொத்துவில் அறுகம்பைப் பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாட்டு வண்டியில் பயணம்  செய்து வருகின்றனர்.

நாடு எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் நிலையில்,  பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டோக்கள், வான்கள் என்பன சேவையில் ஈடுபடுவதில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்கின்றனர்.

Leave a Reply