தலை இருக்க…

தலை இருக்க வால் ஆடுவதேன்? இலங்கை வங்கி கிளையில் சம்பவம்

செல்லையா பேரின்பராசா

இலங்கை வங்கியின் கல்முனை கிளைக்கு செல்கின்ற வாடிக்கையாளர்கள் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருக்கின்ற உத்தியோகத்தர்களால் வீண் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

வங்கி முகாமையாளர், வங்கி உத்தியோகத்தர்கள் ஆகியோர் பொதுமக்களுடன் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்கின்றபோதிலும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேண்டா வெறுப்பாக நடக்கின்றார்கள்.

நேற்று வெள்ளிக்கிழமை அடகு மீட்பதற்காக காலை 10.00 மணிக்கு வாடிக்கையாளர் ஒருவர் சென்று உரிய முறையில் பணம் செலுத்தி பற்று சீட்டு பெற்றார்

அடகு மீட்பு பிரிவின் வங்கி உத்தியோகத்தர் குறித்த வாடிக்கையாளரை நண்பகல் 12.00 மணிக்கு வந்து நகையை பெற்று செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அவ்வாடிக்கையாளர் குறித்த நகையை பெறுவதற்கு உரிய நேரத்தில் மீண்டும் வந்தபோது அவரை உள்ளே அனுமதிக்காது பாதுகாப்பு உத்தியோகத்தர் தடுத்து நிறுத்தினர். . 12. 30 மணி்க்கு வருமாறு சொல்லி திருப்பி அனுப்ப முயன்றார்.

ஆனால் இவ்வாடிக்கையாளர் நீண்ட வாத பிரதிவாதங்களை புரிந்து பகீரத முயற்சிகளை மேற்கொண்டு உள்ளே சென்றார். பின்னர் அடகு மீட்பு பிரிவுக்கு சென்று பணம் செலுத்திய பற்றுச்சீட்டை காண்பித்து அடகு நகையை மீட்டார்.

இதன் பின்னர் அவருக்கு நேர்ந்த அசௌகரியம் மீண்டும் ஒரு பொதுமகனுக்கு ஏற்பட கூடாது என்பதற்க்காக வங்கி முகாமையாளரிந் அலுவலகத்துக்கு சென்றுமுறையிட்டார்.

பாதுகாப்பு உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாட்டுக்காக வங்கி முகாமையாளர் வருத்தம் தெரிவித்தமை குறிப்பிட தக்கது.

Leave a Reply