உலக அளவில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்த காரணத்தினால், சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு தற்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியா உள்பட அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கான முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள், கொரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்தவர்கள், கொழும்பிற்கு வந்தவுடன் பரிசோதனை செய்ய வேண்டியது இல்லை என இலங்கை அரசின் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா பயணத்திற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்பு ஒருவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை, தடுப்பூசி பெற்ற பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


