கோதுமை மா, சீமெந்து விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!

எரிவாயு, பால்மா, சீமெந்து மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையை அரசு நீக்கியுள்ளது.

அதனால், 50 கிலோ சீமெந்து மூடையின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

சீமெந்து கட்டுப்பாட்டு விலையை நீக்கிய பின் அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் சீமெந்து நிறுவனங்கள் கலந்துரையாடியபோதே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.

இதேவேளை, ஒரு கிலோ மாவின் விலையை ரூ. 15 – 20 வரை அதிகரிக்க மா நிறுவனங்கள் தன்னிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply