நாட்டில் தேயிலை இறப்பர் தொழிலாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!

உலகலாவிய ரீதியில் கொவிட் பெருந்தொற்று தொழிலாளர் வர்க்கத்தை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியது.அதனை தொடர்ந்து பல நாடுகள் அச்சாவில் இருந்து வெளியேறுவதற்கு முயச்சித்து கொண்டு உள்ள இவ்வேளையில் இலங்கை மிகுந்த பாதிப்பை நோக்கி நகர்கிறது என செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

எமது நாட்டில் காணப்பட்ட முறையற்ற அரச நிர்வாகம், ஊழல், லஞ்சம், இவ்வாறான பல காரணங்கள் எமது நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி விட்டது.இப்பொருளாதார நெருக்கடியால் இருந்து வெளியேற வேண்டுமானால் நாம் அரசாங்க மாற்றம் மட்டும் இதற்கு தீர்வாக அமையாது நாட்டில் காணப்படும் அரச கட்டமைப்புகள் பொறிமுறை அனைத்திலும் தகுந்த மாற்றங்களை மேற்கொண்டு தொழிலாளர் வர்க்க சிந்தனையுடன் கூடிய அரசு உருவாகும் பட்சத்தில் இந்த நெருக்கடியில் இருந்து எம்மால் வெளிவரமுடியும் .

அந்த வகையில் எமது நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர் வர்க்கத்தை சார்ந்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் பட்சத்தில், தற்போது நாட்டில் நிலவும் போராட்டக்காரர்களுக்கு பெரும் பாலமாக அமையும்.இன்றைய நிலையில் நமது நாட்டிற்கு அன்னிய செலாவணியை பெற்று தரும் ஒரு துறையாக இருக்கிறது.பெருந்தோட்ட துறை தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக இன்று நாட்டில் காணப்படும் டொலர் பிரச்சனைக்கு இத தொழிலாளர் ஊடாக பாரிய பங்களிப்பு கிடையாது.ஆனால் கூட்டு ஒப்பந்தம் மறுக்கப்பட்டததை தொடர்ந்து கம்பெனிகள் இத்தொழிலாளர்களை பெரும் அடக்கு முறைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம் இக் காரணம் கூறி தொழிலாளர்களின் பிரச்சினைகளின் போது தலையிடாமல் இருந்ததோடு, தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை முன்னிலைப்படுத்தி தொழிலாளர் பிரச்சினையை பின்தள்ளியுள்ளார்கள்.

மேலும் பெருந்தோட்ட க்கள் யாவும் எந்த விதமான பராமரிப்பு இல்லாமல் போய்விட்டது.குறிப்பாக கிருமி நாசினி, உரம் ,புல்லு வெட்டுதலுடன் உர மானியம் வழங்கபடாமையினால் பல தோட்டங்கள் காடாக மாறிவருகிறது.இதனால் எதிர் காலத்தில் பல பெருந்தோட்ட ங்கள் மூடிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்போது தொழிலாளர்கள் தேயிலை செடிகளில் பச்சை கொழுந்து பரிக்கும் போது தேயிலை செடிகளில் கொழுந்தினை தேடி திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலை நாட்டில் உள்ள அனைத்து தேயிலை இறப்பர் தோட்டங்களிலும் ஏற்பட்டு உள்ளது.

தற்போது பெண்கள் தேயிலை பரிக்கும் அளவிற்கே வேதனம் வழங்க படுகிறது.ஒவ்வொரு தோட்டத்திலும் ஒவ்வொரு விதமான முறையில் பரிக்கும் ஒரு கிலோ கொழுந்து க்கு 35/ரூபாய் 40/- ரூபாய் 45/- ரூபாய் 50/- போன்ற பல்வேறு விதத்தில் வேதனமாக வழங்குவதுடன் இதனால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி, விடுமுறை நாட்களில் வழங்கப்படும் மேலதிக சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மிக அரிதாகவே உள்ளது.உதாரணமாக ரூபாய் 700/- சம்பளம் அடிப்படையில் கிடைப்பதில்லை ஆகவே அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை செங்கொடி சங்கம் தெரிவிக்கிறது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களின் குடும்பங்களை காப்பாற்றி கொள்வதற்கு பணியாளர்கள் வெளிநாடுகளுக்கும் வேறுப்பணிகளுக்கும் வேலை தேடி செல்கின்ற நிலையானது இன்று மலையகத்தில் பெரும் பிரச்சினையை பரணமித்துள்ளது.

இவ்வாறான தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று முறையான சம்பளம் வழங்க படாமையினாளும், பாதுகாப்பான இல்லங்கள், பாதுகாப்பான ஏஜன்சிகள், அமையாது விடுத்தும் வேலை தலங்களிலும்,ஏஜன்சிகளிளும் வன்முறைகளுக்கும், துஸ்பிரயோகத்திற்க்கும் உள்ளாகி மேலும் தம் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாது பல் வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ள பெரும்பாலான பெண்கள் தொழில் வழங்குனரினால் அடி, ‘உதை,சித்திரைவதைக்கு பாலியல் வற்புறுத்தல் உள்ளாகின்றனர்.இந்நிலையானது பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் உடல் உல ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, வருமானம் இன்றி மிகுந்த வறுமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மேலும் பெருந்தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இவ்வாறு தொடர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் நாட்டில் தேயிலை இறப்பர் வேலை செய்யும் தொழிலாளர்கள் என்னிக்கை  மிக குறைய ஆரம்பித்ததுள்ளது .இந்த நிலை தொடர்ந்தால் தோட்டங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.

தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் அனைத்து விவசாயத்தையும் கட்டி எழுப்புவதே  அந்நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு பிரதான காரணமாக அமைகிறது.ஆனால் எமது நாட்டில் அன்னிய செலாவணியை பெற்று தரும் பிரதான துறையால் ஒன்றான பெருந்தோட்ட தேயிலை இறப்பர் உற்பத்தி துறை நாளுக்கு நாள் அழிவின் விளிம்பில் சென்று கொண்டு உள்ளது.

இதனை பெருந்தோட்ட முதலாளிகள் மற்றும் அரசாங்கம் அமைச்சர்கள் கண்டும் காணாத வகையில் உள்ளனர்.ஆகவே தொழிலாளர்களாகிய எமக்கு இத் தொழிலை பாதுகாத்து கொள்ளவும் எமக்கான உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள போராடவேண்டிய காலகட்டம் இதுவே என அரசியல் கட்சிகள் ஏனைய தொழிற் சங்கங்கள் கட்சி மத பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் அறைகூவல் விடுக்கின்றார்.

பிற செய்திகள்

Leave a Reply