பாறையிலிருந்து விழுந்து இருவர் மரணம்! தீவிர விசாரணையில் பொலிஸ்

ஹாலிஎல – ஜகுல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பாறையிலிருந்து விழுந்து நேற்று (9) இரவு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 43, 25 வயதுடையவர் என ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஒப்பந்த நிறுவனமொன்றில் பணியாற்றிவரும் ஜேசிபி இயந்திரத்தின் சாரதியும் மற்றுமொரு நபருமான 43, 25 வயதுடைய இருவரே இவ்வாறு மரணமடைந்தனர்.

குறித்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் அவர்கள் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டனர் என்று பதுளை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவின் பிரதான வைத்தியர் பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் எதற்காக பாறையின் மீது ஏறினர் என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply