புத்தளத்தில் கிணற்றிற்குள் வீழ்ந்த யானையை மீட்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் வாகனங்களுக்கு எரிபொருள் இன்மையினால் ஊடகவியலாளரின் வாகனத்தில் சென்றுள்ளனர்.
புத்தளம் கருவகஸ்வெவ ரஜவிகம பகுதியில் விவசாயத்திற்கு வெட்டப்பட்டிருந்த கிணற்றில் நேற்று இரவு யானை ஒன்று வீழந்துள்ளதை அவதானித்த மக்கள் கருவலகஸெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஊடகவியலாளர் ஒருவரின் வாகனத்தில் இன்று பிற்பகல் குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்றதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணக்கள அதிகாரி மாரசிங்ஹ தெரிவித்தார்.
குறித்த காட்டு யானையை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெக்கோ உதவியுடன் பாதுகாப்பாக மீட்டெடுத்து அப்பகுதி காட்டிற்குள் விரட்டியதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
குறித்த யானை 15 வயதுடையதுயென மதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



பிற செய்திகள்





