வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – பறளாய் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலின் உண்டியல் உடைத்து, அதனுள் இருந்த பணம் களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு முகம்மூடிகள், கையுறைகள் அணிந்த அறுவர் ஆலயத்திற்குள் நுழைந்து அங்கு இருந்த காவலாளியை தாக்கிவிட்டு பணத்தினை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இன்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இதுதொடர்பாக முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடி வட்டுக்கோட்டை பொலிஸார் வலைவீசி வருகின்றனர்.


