முதியவரிடம் பணப்பையை பறித்தவர்கள் நையப்புடைப்பு; யாழில் சம்பவம்!

பல்லசுட்டி பகுதியில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று மதியம் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பல்லசுட்யியில் வைத்து முதியவர் ஒருவரின் கைப்பையை பறித்துக்கொண்டு தப்பித்துச் சென்றனர்.

பின்னர் அவர்கள் இருவரும் வடலியடைப்பில் உள்ள ஆலயம் ஒன்றில் திருடுவதற்கு முற்பட்டவேளை அப்பகுதி பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர்.

அத்துடன் முதியவரிடம் பறித்த பணம் மற்றும் தொலைபேசி உள்ளடங்கிய கைப்பையுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டனர்.

முதியவர் ஏற்கனவே செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து அவரது பணம் மற்றும் தொலைபேசி உள்ளடங்கிய பை முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

24 மற்றும் 25 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் இருவரும் சங்கானைப் பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply