எரிபொருள் நெருக்கடியால் நீர் விநியோகம் விரைவில் பாதிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள், அனைத்து நுகர்வோருக்கும் தடையில்லா நீர் விநியோகத்தை உறுதி செய்வதில் உறுதி பூண்டுள்ளதாகவும், எனினும், எரிபொருள் தொடர்பில் எதிர்மறை தாக்கம் இருந்தால் முன்னுரிமை பட்டியலில் இருந்து நீர் விநியோகத்தை நீக்குவதாகவும் சங்கம் அரச தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சுகாதார சேவைக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போன்று தமது சேவைக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பொறியியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிற செய்திகள்





