கடும் நெருக்கடி; தங்க நகைகளை விற்பனை செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை விற்பனை செய்வதாக அந்த சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் குறிப்பிட்டார்.

அத்துடன் புதிதாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கட்டாய தேவைகளுக்காக மாத்திரமே தங்க நகை கொள்வனவில் மக்கள் ஈடுபடுவதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பு செட்டியார் தெருவில் இந்த வாரம் 24 கரட் ஒரு பவுண் தங்கம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply