கோட்டாவின் உருவ பொம்மையை கட்டித் தூக்கிய மக்கள்

நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

வரிசையில் நின்று ஏமாற்றமடையும் மக்கள் ஒவ்வொரு நாளும் போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர்.

இந்த போராட்டங்கள் சில இடங்களில் கலவரமாக மாறி உயிரிழப்புக்களை ஏட்படுத்துகின்றன.

அரசுக்கு எதிராக பாதையில் இறங்கிய மக்கள் ஆரம்பத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அவற்றிற்கான தீர்வு கிடைக்காத நிலையில் தமது தேவைகளை நிறைவேற்ற கூறியும் திறமையற்ற அரசை பதவி விலக கூறியும் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் விரக்தியின் உச்சத்தை தொட்ட மக்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவ பொம்மையை தூக்கில் இட்டு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply