களுத்துறை, புளத்சிங்கள பொலிஸ் பிரிவில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
கோட்டா வீதி, கோவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக ஹொரண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலையுடன் தொடர்புடைய பெண்ணின் கணவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்துக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைவாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


