பேருந்தில் ஏற முற்பட்ட வயோதிபர் பரிதமாக உயிரிழப்பு

புஸ்ஸல்லாவை பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று மதியம் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வயோதிபர் சுகவீனமுற்று இருந்த நிலையில், தனியார் மருத்துவசாலையில் மருந்து பொருட்களை கொள்வனவு செய்து, வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏற முற்பட்டபோதே உயிரிழந்துள்ளார்.

புஸ்ஸல்லாவை – ஹெல்பொட தோட்ட பகுதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புஸ்ஸல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply