
தெல்லிப்பழை – அளவெட்டி மத்திப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 291 லீட்டர் டீசல் நேற்று சனிக்கிழமை தெல்லிப்பழைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
குறித்த பகுதியில் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெல்லிப்பழைப் பொலிசாரக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
அதன்போது அங்கு விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 70 லீட்டர் டீசலையும், ஏற்கனவே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பரல் டீசலையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இதனுடன், அப் பகுதியில் 42 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பிற செய்திகள்





