
கொழும்பு, ஜுலை 04
ஹோமாகம, மாகம்மான பிரதேசத்தில் வீடொன்று தீப்பற்றியதால் காயமடைந்த 6 வயது சிறுமி சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளாள். இதனால் மேற்படி தீயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் 25 ஆம் திகதி இரவு மேற்படி வீடு தீப்பற்றியது. இதனால், இச்சிறுமியின் 47 வயதான தந்தை 39 வயதான தாய் உயிரிழந்த நிலையில், 19 வயதான மூத்த சகோதரி 3 நாட்களின் பின் உயிரிழந்தார்.
தற்போது 6 வயதான மேற்படி சிறுமியும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளாள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்,