மிஸ் இந்தியா பட்டத்தை கைப்பற்றிய சினி ஷெட்டி

இந்தியா,ஜுலை 04

வி.எல்.சி.சி.-பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2022 அழகிப்போட்டி பல சுற்றுகளாக நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியின் இறுதி சுற்றுப்போட்டி மும்பையில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில், 31 மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து வெற்றிபெற்ற அழகிகள் பங்கேற்றனர். அதில் சிறந்த அழகியை தேர்வு செய்ய நேர்காணல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் போட்டி நடைபெற்றது.

இந்த அழகிப்போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த சினிஷெட்டி ‘மிஸ் இந்தியா வேர்ல்டு 2022’ பட்டத்தை வென்று முதலிடத்தை பிடித்தார். பின்னர் அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது.

ராஜஸ்தானை சேர்ந்த ரூபல்ஷெகாவத் 2-வது இடத்தையும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷினதா சவுகான் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

மிஸ் இந்தியா நடிகைகள் நேகாதுபியா, மலாய்கா அரோரா, நடிகர் டினோமோரியா, வடிவமைப்பாளர்கள் ரோகித் காந்தி, ராகுல் கன்னா, நடன இயக்குனர் ஷியாமக்தவார், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் ஆகியோர் அழகிப் போட்டி இறுதிச் சுற்றின் நடுவர்களாக செயல்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *