கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாழிற்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று மண்ணுடன் வந்த இரு டிப்பர்களுடன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டாவளை மண்ணிற்கு அனுமதிப்பத்திரம் எடுத்துவிட்டு நாகர்கோவில் மண்ணைக் கடத்திச் செல்லும்போது இந்த டிப்பர்களுடன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


