‘காலால் உதைத்தது உண்மையே: ஆனால் அவர் மீது படவில்லை’ – இராணுவ அதிகாரி

குருணாகல் – யக்கஹபிட்டிய ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தான் நபர் ஒருவர் மீது காலால் உதைத்து தாக்கிய போதும் அது அந்த நபர் மீது படவில்லை என குருணாகல் நகர பகுதியின் இராணுவ லெப்டினன் கேர்ணல் தர கட்டளை அதிகாரியான விராஜ் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் மற்றும் சமூக வளைத்தளங்களில் பரவி வரும் வீடியோ காணொளி தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தான் குருணாகல் பகுதியில் சேவையாற்றும் நற்பெயர் மிக்க இராணுவ அதிகாரி என்றும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே பாதாள உலகக் கோஷ்டியினர் ஒன்றுகூடியுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமையவே தாம் அங்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் காலால் உதைத்தது உண்மையே என குறிப்பிட்ட அவர், எனினும் தனது கால் அவரது உடம்பில் படவில்லை எனவும் குறித்த நபரிடமே அது தொடர்பில் கேட்டுப்பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பில் நிறுவன மட்டத்திலான உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி – வீரகேசரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *