சிபெட்கோவுக்கு வராத பவுசர், IOC இற்கு எவ்வாறு வருகிறது? – சபையில் செல்வம் எம்.பி. கேள்வி

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் பவுசர்கள் வராது என்று அரசாங்கம் அறிவித்தாலும் கூட லங்கா ஐஓசி எரிபொருள் நிலையத்திற்கு தினமும் எரிபொருள் பவுசர்கள் எப்படி வருகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வன் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றின் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாகவே எரிசக்தி அமைச்சர் மீதான மக்களின் நம்பிக்கை தற்போது இல்லாமற் போயுள்ளதாகவும் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.

வரிசைகயில் நிற்காதீர்கள் எரிபொருள் பவுசர்கள் வராது என்று ஊடகங்களில் எரிசக்தி அமைச்சர் அறிக்கை விடுகின்றார்.

ஆனால் தனியார் எரிபொருள் நிலையங்களுக்கு அதிகளவான பவுசர்கள் நாளாந்தம் வருகின்றன.

மக்கள் அங்கு வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்றுச் செல்கின்றனர். இது என்ன நியாயம்? எரிசக்தி அமைச்சர் ஒன்றை சொல்கிறார், ஆனால் வேறொன்று நடக்கிறது.

மேலும், சிபெட்கோ ஊடாக எரிபொருட்களை கொள்வனவு செய்து வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் மாஃபியா நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

எனவே அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில் ஆராய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிற செய்திகள்

Leave a Reply