யாழ்ப்பாணத்தின் பெரும் தெருக்களில் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் வலம் வரும் தன்னம்பிக்கை உடைய பொன்னையா சிவஞானம் மீது சமூகத்தின் குரல் சுவாரஸ்யமான தகவலொன்றுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
அரியலையை வசிப்பிடமாக கொண்ட இவர், கடந்த 6 வருடங்களாக உடற்பயிற்சிக்காக துவிச்சக்கர வண்டியினை ஓடும் பழக்கம் உடையராக உள்ளார்.
சற்று வித்தியாசமாக காணப்படுகின்ற துவிச்சக்கர வண்டி குறித்தும், அவருடைய தன்னம்பிக்கைகான காரணத்தையும் கூறுமாறு எமது செய்தியாளர் வினாவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அவர் தெரிவிக்கையில்,
இது எனது மகனின் பரிசு.கடந்த ஒன்டரை வருடமாக யாழ் பெரும் தெருக்களில் இந்த வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் உடற்பயிற்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் மாலைப் பொழுதில் வலம் வருவேன்.
எனக்கு 72 வயதாகிறது. ஆனாலும் சிறு வயதில் இருந்தே கால்பந்து, கர்ப்பந்து, கொக்கி, கிரிக்கட் போன்ற விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டதால் இன்னும் இளமையாகவும், திடமாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
தினமும் அரியாலையிலிருந்து கண்டி விதியின் ஊடக கைத்தடியை அடைந்து அங்கிருந்து கோப்பாய் சென்று பருத்தித்துறை வீதியின் ஊடக நல்லூரை அடைந்து அங்கிருந்து மீண்டும் அரியலையை அடைந்து தனது மிதி வண்டி உடற்பயிற்சியை நிறைவு செய்யும் வழக்கம் உண்டென தெரிவித்தார்.
மேலும், தனது மனைவி கொடுத்த உத்வேகத்தின் காரணத்தினாலையே இந்த மிதிவண்டி பயிற்சியை இன்றுவரை தொடர்வதாக கூறுகின்றார்.
தன் மனைவி தனக்கு மிகவும் பக்க பலமாக இருந்ததாகவும், தற்போது மனைவியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாக இருப்பினும் அவரது நினைவுடன் தான் வாழ்வதாக கவலை தெரிவித்தார்.
அத்துடன், தன் போன்ற வயதினை உடையவர்கள் முடியாது என எண்ணி முடங்கிக் கிடைக்காமல் தினமும் நடை பயிற்சி, உடற்பயிற்சி என்பவற்றில் ஈடுபட்டால் எவ்வித உடல்நலக் குறைவும் வராது என கூறிச் சென்றார்.


