இலங்கையில் சுமார் 11,000 இராணுவ உத்தியோகத்தர்களுக்கு பதவியுயர்வு!

இலங்கையில் சுமார் பதினோராயிரம் இராணுவ அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு 72 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான படையினருக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

567 அதிகாரிகள் மற்றும் 10369 ஏனைய நிலைகளில் பதவி வகிக்கும் உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாறு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபயவின் அனுமதியின் பிரகாரம் இந்த பதவி உயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவி ஏற்றுக்கொண்டமையின் பின்னர் வரலாறு காணாதளவிற்கு இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினருக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் இராணுவத்திற்கு 72 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply