பிரதான குற்றவாளியுடன் திருமண பந்தத்தில் இணைய முயற்சிக்கும் சஜித்?

கத்தோலிக்க சமூகத்தினரின் பிரதான குற்றவாளியாக கருதப்படும் தரப்பினருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச திருமண பந்தத்தில் இணைந்துகொள்ள முயற்சிக்கிறார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று (05) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தலைவர் தோல்வி என்பதற்காக நாட்டை தோல்வியடைய செய்ய முடியாது.

எனவே தான் மூன்று மாத கால அடிப்படையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளோம்.

ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடவில்லை.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாமென மக்கள் கூறுவது நியாயமானது.

மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில் எதிர்தரப்பினரின் செயற்பாடு நாட்டை மென்மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் உள்ளன – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply