யாழ் பரமேஸ்வரன் ஆலய எண்ணெய்க் காப்பு!(படங்கள் இணைப்பு)

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று காலை முதல் இடம்பெற்றது.

ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் பூர்வாங்க கிரியைகள் கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியது.

இந்த நிலையில் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள், பொதுமக்கள் என பலரும் எண்ணெய் காப்பினை பக்தி பூர்வமாக மேற்க் கொண்டனர்.

மேலும், நாளை காலை 6 மணிமுதல் 6:45 வரை கும்பாபிஷேக பூஜைகள் இடம்பெற இருப்பதோடு, அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரீக பீடத்தால் தாகசாந்தி நிலையமும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply