
கொழும்பு,ஜுலை 6
பிரதமர் பதவியை ஏற்க தாம் தயாராகவிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.