இலங்கை தொடர்பில் நியுசிலாந்து அரசாங்கத்தின் அறிவிப்பு

நியுசிலாந்து,ஜுலை 6

நியுசிலாந்து பிரஜைகள் இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் நியுசிலாந்தின் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் என நியுசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

நியுசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாசிய பொருட்களுக்கு மக்கள் வரிசைகளில் காத்திருப்பதாக நியுசிலாந்து அறிவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் நியுசிலாந்தின் சுற்றுலா பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலேயே இவ்வாறு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply