வவுனியாவில் முதியவாின் கழுத்திலிருந்து தங்கச் சங்கிலி பறிப்பு

வவுனியா,ஜுலை 6

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த துவிச்சக்கர வண்டியை, உந்துருளியில் பின்தொடர்ந்த அவர்கள் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து முதியவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், கொள்ளையிடப்பட்ட தங்கச்சங்கிலியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply