மக்கள் குடியிருப்பில் சரிந்து விழுந்த பாரிய மரம்! பெண் படுகாயம்

வெளிமடை டயரபா மேற்பிரிவு தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று தோட்ட குடியிருப்பில் சரிந்து விழுந்துள்ளது.

இதையடுத்து, அங்கிருந்த வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

நேற்று (05 ) இரவு நிலவிய காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெளிமடை டயரபா மேற்பிரிவு தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று குறித்த தோட்ட குடியிருப்பில் சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த பெண்ணொருவர் காயங்களுடன் வெளிமடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த குடியிருப்பில் முறிந்து விழுந்த மரம் தொடர்பில் பல மாத காலமாக தோட்ட நிர்வாகத்திடம் குடியிருப்புக்கு முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்ததுடன், வெட்டுவதற்காக அனுமதி கேட்ட போதிலும் தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதனாலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply