சீமெந்து பக்கெட்டின் விலை அதிகரிப்பு

கொழும்பு, ஜுலை 06

50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து  பக்கெட்  200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சீமெந்து  பக்கெட் ஒன்றின் புதிய விலை 3,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது.

ஒரு வருட காலத்திற்கு முன்னர் 50 கிலோ கிராம் சிமெந்து  பக்கெட் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து பக்கட்டின்   விலை 6 சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் ஆகியன காரணமாக சீமெந்து  பக்கெட்டுக்களை பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வதில் பாரிய அசெளகரியங்களையும், போக்குவரத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக சிமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply