தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்! – யாழில் சோகம்

யாழ்ப்பாணம் – புலோலி மத்தி – பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

5 பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் நவரட்ணம் (வயது – 65) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் கடந்த 1ஆம் திகதி, உறவினர் ஒருவருடைய காணியில், ஏணியை வைத்து தேங்காய் பறிக்க மரத்தில் ஏற முற்பட்ட வேளை, ஏணியுடன் கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து, மந்திகை ஆதார வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மறுநாள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இந்த மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

பிற செய்திகள்

Leave a Reply