ஒகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு வரப்போகும் சுற்றுலா பயணிகள்!

கடந்த மாதத்தை விட இந்த மாதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையில் போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply