
கொழும்பு, ஜுலை 07
இலங்கை டெஸ்ட் அணியில் மேலும் மூன்று வீரர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனஞ்சய டி சில்வா, அசித்த பெர்னாண்டோ, ஜெஃப்ரி வெண்டர்சே ஆகியோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி நாளை காலியில் ஆரம்பமாகும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர்கள் 3 பேரும் இடம்பெறமாட்டார்களென ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
நேற்று நடத்தப்பட்ட ரெபிட் அண்டிஜென் சோதனையின் போது குறித்த மூன்று வீரர்களும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது.
ஏனைய வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் ஆகியோர் ரெபிட் அண்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் அவர்களின் பெறுபேறு எதிர்மறையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை டெஸ்ட் அணி வீரர்களான ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோரும் கொவிட் தொற்றுககு உள்ளாகினர்.





