தியட்டருக்கு படம் பார்க்க சென்றவருக்கு ஒரு நாள் சிறை! யாழில் சம்பவம்

மது போதையில் திரைப்படம் பார்க்கச் சென்ற ஒருவர் தியட்டரிலேயே பல மணிநேரம் சிறை வைக்கப்பட்டப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றது.

யாழ். நகரில் இயங்கும் தியட்டருக்கு மதுபோதையில் இரவு படம் பார்க்கச் சென்ற ஒருவர் படம் முடியமுன்பே உறங்கிவிட்டார்.

படம் நிறைவடைந்த பின்பு அனைவரும் வெளியேறியதும் திரையரங்கு உரிமையாளும், பணியாளர்களும் வழமையான பணி முடித்து திரையரங்கை மூடி வீடு சென்று விட்டனர்.

மதுபோதையில் உறங்கியவர் எழுந்து பார்த்தபோது பகல் 10 மணி. எவருமே இன்றி தனிமையில் சகல வாசல் கதவையும் பார்த்தார். எந்தப் பாதையூடாகவும் வெளியே வர முடியவில்லை. மாடிக்கு சென்று அங்கிருந்த யன்னல் வழியாக அயலில் உள்ள கடைக்கு வந்துபோகின்றவர்களை அவதானித்துள்ளார்.

திரையரங்கின் அருகே ஓருவர் தேநீர்கடை நடாத்துகின்றார். அவரது கடைக்கு வந்தவர்கள் அவதானித்து கடை உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதனால் அவர்கள் திரையரங்கு உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்தை தேடிப்பிடித்து தகவல் வழங்கி, உரிமையாளர் வந்து சிறை மீட்க 12 மணியாகிவிட்டது. இதன் பின்பே தனக்கு நடந்தவற்றை தேநீர்கடையில் தெரிவித்து வீடு சென்றார்.

பிற செய்திகள்

Leave a Reply