யாழ்.போதானாவிற்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு!

<!–

யாழ்.போதானாவிற்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு! – Athavan News

S.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலைக்கு தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் (புதன்கிழமை) வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் திரு . நந்தகுமாரிடம் Rtn.N.சிவகுமார் மருந்து பொருட்களை வழங்கி வைத்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியின் வேண்டுகோளுக்கு அமைய 8இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களே வழங்கி வைக்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *