தமிழ்நாடு மாநில பொலிஸ் இலங்கைக்கு ஒரு கோடியே நாற்பது இலட்சம் இந்திய ரூபாய் நிதியுதவி!

<!–

தமிழ்நாடு மாநில பொலிஸ் இலங்கைக்கு ஒரு கோடியே நாற்பது இலட்சம் இந்திய ரூபாய் நிதியுதவி! – Athavan News

தமிழ்நாடு மாநில பொலிஸார் இலங்கை மக்களுக்காக ஒரு கோடியே நாற்பது இலட்சம் இந்திய ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

தமிழக பொலிஸ் தலைமையகத்தின் டி.ஜி.பி சைலேந்திரபாபு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அண்மையில் இந்த நிதி உதவி தொகையை கையளித்திருந்தார்.

மேலும் இந்திய பாதுகாப்பு சேவைகள் சங்கமும் ஆறு கோடியே அறுபத்து மூன்று இலட்சம் இந்திய ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Leave a Reply