மன்னார் ஊடாக இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த 09 பேர் கைது

மன்னார் ஊடாக இந்தியாவிற்கு சட்டவிரோத முறையில் செல்ல முயற்சித்த 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேசாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களே நேற்றிரவு(6) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த 09 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மூன்று ஆண்களும், மூன்று பெண்களும், மூன்று சிறுவர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply