அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 70% ஆக அதிகரிக்கும் – மத்திய வங்கி

<!–

அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 70% ஆக அதிகரிக்கும் – மத்திய வங்கி – Athavan News

இலங்கையின் அடிப்படை பணவீக்கம் அடுத்த சில மாதங்களில் 70%  ஆக உயரக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனாவிடமிருந்து பெறப்படும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பரிவர்த்தனை வசதி உட்பட இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஜூன் மாத இறுதிக்குள் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply