பொலிஸ் அதிகாரியின் தலைக்கவசத்தை திருடியவர்களுக்கு ஏற்பட்ட நிலை

மாவனல்லை நகரின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வெள்ளை நிற பாதுகாப்பு தலைக்கவசத்தை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் உந்துருளியில் வந்த பொலிஸ் சார்ஜன்ட், தனது தலைக்கவசத்தை வர்த்தக நிலையத்தில் வைத்திருந்தபோது, இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வர்த்தக நிலையத்தில் இருந்த சிசிடிவி கெமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவர் குறித்த தலைக்கவசத்துடன் வெளியே செல்வது கண்டறியப்பட்டது.

அதன்படி அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் வராகொட பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதான விமானப்படை சிப்பாய் எனவும் மற்றையவர் கபடாதென்ன பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply