பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சமூகத்தில் யாசகம் பெறும் மனநிலையில் அதிகரிப்பு

<!–

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சமூகத்தில் யாசகம் பெறும் மனநிலையில் அதிகரிப்பு – Athavan News

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அதிகளவான மக்கள் வறியவர்களாக மாறியுள்ளனர்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் யசஞ்சலி தேவிகா ஜயதிலக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை காரணமாக மக்கள் தமது உண்மையான எதிரியை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சமூகத்தில் யாசகம் பெறும் மனநிலை அதிகரித்து வருவதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் யசாஞ்சலி தேவிகா ஜயதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply