தாமதம் ஏற்படவுள்ள ரயில் சேவைகள்

கொழும்பு,ஜுலை 7

வியாழக்கிழமை மாலை இடம்பெறவுள்ள ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என ரயில் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

ரயில் திணைக்கள போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த பணியாளர்கள் இன்றைய தினமும் பணிக்கு சமுகமளிக்கவில்லை என ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் எஸ்.பீ விதானகே தெரிவித்துள்ளார்.

கடமைக்கு சமுகமளிப்பதற்காக, தங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து அவர்கள் பணிகளில் இருந்து விலகியுள்ளனர்.

இதன்காரணமாக, இன்று மாலை இடம்பெறவுள்ள ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என ரயில் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply