
யாழ்ப்பாணம்,ஜுலை 7
யாழ். மிருசுவில் கொலை விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம்திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையினால எல்.ரி.பி. தெஹிதெனிய மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய குழாம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
இந்நிலையிலேயே மிருசுவில் கொலை விவகாரத்தில் தமது உறவுகளை பறிகொடுத்த இருவரும், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சார்பிலும், மனுத உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அம்பிகா சற்குணநாதன் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 மனுக்களும் இவ்வாறு எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதியில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.





