கூடிய விலையில் எரிபொருள் விற்பனை: 4 பேர் கைது

திருகோணமலை,ஜுலை 7

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகூடிய விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்த நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, ஹபரணை பிரதான வீதியின கல்ஓயா பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, அதிலிருந்து 100 லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் ஒரு லீற்றர் டீசலை 1,100 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply