மானிப்பாயில் கைமாற்றப்பட்ட போதைப்பொருள்! ஒருவர் கைது

யாழ். மானிப்பாய் பகுதியில் ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் வைத்து ஐஸ் போதைப்பொருளை கைமாற்றம் செய்யும் போதே, குறித்த சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவர் தற்பொழுது ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply