
கொழும்பு – புறக்கோட்டையில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி – பிரதமர் ஆகியோரை பதவி விலகுமாறு இதன்போது பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் இன்று சைக்கிள் அணிவகுப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வகட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த சைக்கிள் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
நுகேகொட மேம்பாலத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் அணிவகுப்பு கொழும்பில் உள்ள பொது நூலகத்திற்கு அருகில் நிறைவடைந்தது. அதன் பின்னர் பொது ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





