மீண்டும் கொவிட் தாண்டவம் உச்சம்

கொழும்பு,ஜுலை 7

உலகளாவிய ரீதியாக மீண்டும் கொவிட்-19 தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் இலங்கை அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

அவ்வாறான நிலைமையை தடுப்பதற்காக கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதான வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரோனின் திரிபின் உப திரிபுகள் தற்போது உலகளாவிய ரீதியாக பதிவாகி வருகிறது.

முன்னர், அடையாளங் காணப்பட்ட ஒமைக்ரோன் திரிபை விட தற்போதைய திரிபானது வேகமாக பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 3 மாத காலப்பகுதியில் நாட்டின் கொவிட்-19 தொற்றாளர்களை 10 முதல் 15 பேராக மட்டுப்படுத்த முடிந்துள்ளது.

கொவிட்-19 மரணங்களும் ஒன்று அல்லது இரண்டு என்ற விதத்திலே பதிவாகிறது.

நாட்டு மக்கள் உரிய வகையில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டமையே கொவிட்-19 மட்டுப்படுத்தப்பட்டமைக்கான காரணம் என தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதான வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply