முறைப்பாடு அளிப்பதற்கான காலம் நீடிப்பு

கொழும்பு,ஜுலை 7

கடந்த மார்ச் 31ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதியுடன் முறைப்பாடளிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது அந்த கால அவகாசம் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply