9 ஆம் திகதி ஆர்ப்பாட்டம்: 8,000 பொலிஸ், இராணுவம் குவிப்பு

கொழும்பு,ஜுலை 7

எதிர்வரும் 9ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ள நிலையில், கொழும்பின் பாதுகாப்புக்கு 8,000 பொலிஸாரும் இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

தற்போதும் கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு மேலதிகமாக இந்த 8,000 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போதும் படிப்படியாக கொழும்பு நோக்கி வருகை தருவதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்தன.

3 ஆயிரம் பொலிஸாரும் 5  ஆயிரம் இராணுவத்தினரும் இவ்வாறு வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பு பணிகளுக்காக  அழைக்கப்பட்டுள்ளதாக  அந்த தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply