
கொழும்பு,ஜுலை 7
யுபுன் அபேகோனுக்கு வருடாந்தம் 50,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அனுசரணை பங்களிப்பை இரண்டு வருடங்களுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, யுபுன் அபேகோனின் இரண்டு வருடங்களுக்கான அனுசரணை 100,000 அமெரிக்க டொலர்களாகும்.
இதன் பெறுமதி இலங்கை நாணயத்தில் 36 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் அபேக்ஷா வைத்தியசாலைக்கு நிதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.