கல்முனை எரிபொருள் நிலையத்தில் போலிசாரின் செயற்பாட்டுக்கு மக்கள் கண்டனம்!
நாட்டில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எரிபொருளைப் பெற நாட்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். பல நெருக்கடிகளுடன் மன உளைச்சலுடன் மக்கள் காத்து நிற்கும் இந்த வேளையில் கல்முனை IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரி பொருள் வழங்கப்பட்ட போது போலிசார் தங்களுடைய வாகனங்களுக்கும் தங்களுடைய தேவைக்கு ஏற்ப எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் பெற்று செல்வது தொடர்பில் மக்கள் கடும் விசனத்தை தெரிவித்தனர்.
எரிபொருளின் தேவை அனைவருக்கும் ஒரு அவசியமாக காணப்படுவதால் எரிபொருளை வழங்குகின்ற போது சலுகைகள் பதவிகள் என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்காது எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் எரிபொருளை பகுந்தளிக்க சீரான ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்





