ஆஸி. – இலங்கை 2 ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

காலி, ஜுலை 08

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி இன்று முற்பகல் 10 மணியளவில் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணியின் ஐந்து வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதன் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவுள்ள குழாமை தெரிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனஞ்சய டி சில்வா, ஜெப்ரி வென்டர்சே, அசித பெர்னாண்டோ, பிரவீன் ஜயவிக்ரம மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகிய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

எவ்வாறாயினும், அஞ்சலோ மெத்தியூஸ் பூரண குணமடைந்துள்ளதாகவும் அவரை இன்றைய போட்டியில் விளையாடவுள்ள குழாமில் இணைத்து கொள்வது குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply